இப்படியும் ஒரு மனித பிறவியா..!! ஒரு அப்பா செய்யும் காரியமா இது... 7 மாத கர்ப்பமாக இருக்கும் மகள்.! ரத்தம் கொதிக்கும் மனைவி.!!

இப்படியும் ஒரு மனித பிறவியா..!! ஒரு அப்பா செய்யும் காரியமா இது... 7 மாத கர்ப்பமாக இருக்கும் மகள்.! ரத்தம் கொதிக்கும் மனைவி.!!


father abused his daughter

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆத்தூர் அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சொந்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதை பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக தனது கணவர் கண்ணன் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், கண்ணன் தனது மகளை பாலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தந்தை கர்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.