பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.! பேரதிர்ச்சியடைந்த தாய்.!



father-abbused-his-daughter

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். கூலிவேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகேஷ் தினமும் குடித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மனைவி வீட்டில் இல்லாதபோது, தனது 15 வயது மகளிடம் பலமுறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2 வருடமாக சிறுமியின் தந்தையே, பெற்ற மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாய், தனது கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து மாணவியின் தந்தை, அந்த பழக்கத்தை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த மாணவியின் தாய் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரளித்த புகாரின் பேரில்  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்தனர்.