குட் நியூஸ்! தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கும்! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தியுள்ள முக்கிய திட்டம் ஒன்று மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆகும். கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தின் கீழ், மாதம் தோறும் ரூ.1000 பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
ஒரு கோடி பெண்கள் பயன்பெறும் திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், புதிய பயனாளிகள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கான புதிய விண்ணப்பங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் பெறப்பட உள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
முதற்கட்டமாக, 21 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள், விதவைகள், மற்றும் தனித்த ரேஷன் கார்டு கொண்டிருக்கும் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மனைவிடம் வருவதாக கூறிய கணவர்! நொடியில் தாயின் கால்களை பிடித்து அழுத 3 வயது மகன்! பகீர் சம்பவம்...
புதிய தகுதிகள்
பின்வரும் பெண்கள் தற்போது விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. அரசுத் துறைகளில் சிறப்பு காலப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்ப பெண்கள்
2. நான்கு சக்கர வாகனம் மானியத்தில் பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்
3. இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள்
4. ஆதரவற்ற விதவைகள் மற்றும் பெண்கள்
5. கணவரால் கைவிடப்பட்டவர்கள்
6. 50 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள்
மேற்கண்ட அனைத்து பிரிவினரும் தகுதியின்மை வகைபாட்டில் இடம்பெறவில்லை எனில், அவர்கள் அனைவரும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பெறும் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்! திடீரென கீழே விழுந்த நோயாளி! அதிர்ச்சியான வாகன ஓட்டிகள்! பதறவைக்கும் சம்பவம்...