தமிழகம்

விவசாயியை கொலை செய்து, நகை - பணம் கொள்ளை... மர்ம நபர்கள் வெறிச்செயல்.. அரங்கேறிய பயங்கரம்.!

Summary:

விவசாயியை கொலை செய்து, நகை - பணம் கொள்ளை... மர்ம நபர்கள் வெறிச்செயல்.. அரங்கேறிய பயங்கரம்.!

வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த விவசாயியை கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த 25 சவரன் நகை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள் துரைசாமி-ஜெயமணி தம்பதியினர். இந்த நிலையில், இவர்கள் நேற்றிரவு வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால் ஆளுக்கொரு கட்டிலில் வெளியே காற்றோட்டமாக படுத்து உறங்கியுள்ளனர்.

அப்போது அதிகாலை வேளையில் பால்காரர் வந்து பார்த்தபோது, முகத்தில் வெட்டுக்காயங்களுடன் துரைசாமி சடலமாக கிடந்துள்ளார். அத்துடன் ஜெயமணி கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜெயமணியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துரைசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வீட்டில் உள்ள 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அத்துடன் கொலை செய்தது யார்? எப்பொழுது கொலை செய்தார்கள்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement