தமிழகம்

டெல்டா விவசாயி அரசு பேருந்து! தமிழக அரசை பாராட்டித்தள்ளும் டெல்டா விவசயிகள்!

Summary:

farmer happy for govt bus

டெல்டா விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில், திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய பேருந்துக்கு டெல்டா விவசாயி என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டு டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக அரசு. இந்த அறிவிப்பிற்கு ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து டெல்டா விவசாயிகள் கூறுகையில், தற்போதைய அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபிக்க தொடங்கியுள்ளது தமிழக அரசு என கூறிவருகின்றனர். சமீப காலமாக தமிழக முதல்வர் விவசாய நிலத்தில் விவசாயிகளுடன் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், டெல்டா விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில், வேதாரண்யம் (வழி-தூத்துக்குடி) திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய பேருந்துக்கு டெல்டா விவசாயி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement