'தண்டவாளத்துல விழுந்து சாகு'.. கணவரின் முதல் மனைவி மகளுக்கு சித்ரவதை.. பெண் கைது.!
11 வயது சிறுமியை சித்ரவதைபடுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
2 மகள்கள்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம், சீனிவாசராவ் வீதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் முதல் மனைவி குமுதா, பிரிந்து சென்றுவிட்டார். தம்பதிகளுக்கு 11, 7 வயதுடைய 2 மகள்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
சித்ரவதை:
முதல் மனைவியின் பிரிவுக்குப்பின், மணிகண்டன் கயல்விழி (வயது 25) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை எப்போதும் சூடு வைப்பது, சுடுநீர் ஊற்றுவது என சித்ரவதை செய்து வந்துள்ளார்.

அதிகாரிகளுக்கு தகவல்:
மேலும், எப்போதும் நீ சென்று தண்டவாளத்தில் விழுந்து செத்துவிடு என கூறி வந்துள்ளார். சிறுமியின் வீட்டில் இருந்து அவ்வப்போது அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகள் நலத்துறையின் 1098 க்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
சித்தி கைது:
இதனையடுத்து, குழந்தை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் அனைவரும் சென்று சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் கயல்விழி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #JUSTIN: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. 'தீப்பெட்டி கேட்பதாக நடித்து துணிகரம்' காம கொடூரனுக்கு தர்ம அடி..!