"பசங்க சவகாசம் அதிகம், ஜெயிலுக்கும் போயிருக்கு" - ராகுல் டிக்கியின் தாய் பரபரப்பு பேச்சு.. மாமியார் - மருமகள் சண்டையில் களேபரம்.!



Erode Rahul Tiky Mother Speech Latest News 19 January 2025 

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்த ராகுல் டிக்கி (வயது 27), நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமாக வலம்வந்த ராகுல் டிக்கி மரணத்திற்கு பின்னர், அவரின் மனைவி தேவிகா தனது மாமியார் கணவரை குடிக்க அனுமதித்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி இருக்கிறார். கணவரின் மரணத்திற்கு பின்னர் அவரின் சான்றிதழ், இருசக்கர வாகனத்தை கேட்கிறார். நான் கணவருடன் வாழ்ந்ததற்கு ஆதாரம் என இருப்பது அதுவே என பல்வேறு பரபரப்பு குற்றசாட்டுக்குகளை முன்வைத்து பேசி இருந்தார். 

வீடியோ நன்றி: பாலிமர் செய்திகள்

ராகுலின் தாய் பகீர் பேட்டி

இதனிடையே, ராகுல் டிக்கியின் தாயார் தனது இரண்டாவது மருமகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, பல அதிரவைக்கும் தகவலை பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக மகன் இருந்தான். மகனின் இறப்புக்கு அந்த பெண்ணே காரணம். அந்த பெண்ணுக்கு பசங்க சவகாசம் அதிகம் இருக்கிறது. ஏற்கனவே அவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். அனைத்தையும் அறிந்து திருமணம் செய்து வைத்து, நான் எனது பிள்ளை போல பார்த்துக்கொண்டேன். ஆனால், அவர் இன்று என்மீது அபாண்டமான குற்றசாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். 

இதையும் படிங்க: இரண்டாவது திருமணம், குடிப்பழக்கம், மாமியாரின் டார்ச்சர் - ராகுல் டிக்கியின் மனைவி அதிர்ச்சி பேட்டி.! வாழ்க்கை தறிகெட்டது எப்படி? 

அந்த பெண்மணி சொல்லும் அனைத்தும் பொய். இன்று வரை நான் அவரின் பெயரைச்சொல்லி கூட அழைத்து இல்லை. பாப்பா என அழைப்பேன். நான் அவரை குழந்தை போல பார்த்துக்கொண்டேன், கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன். இருவரும் தனிக்குடித்தனம் சென்ற 3 மாதத்தில் எனது ஒரே மகன் இறந்துவிட்டான். நான் அனாதையாகிவிட்டேன். மகனின் இறப்புக்கு அவரே(மருமகளே) காரணம். நான் ஜவுளிக்கடைக்கு தான் வேலைக்கு சென்று பிழைத்து வருகிறேன். எனது கணவரும் மகனின் திருமணத்திற்கு பின்னர் தான் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்கிறார்" என பேசினார். 

வீடியோ நன்றிபுதிய தலைமுறை

இதையும் படிங்க: தலித் சிறுவனின் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்; மதுரையில் சாதிய தீண்டாமை கொடூரம்.!