நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்... மனைவியின் கண்முன்னே கணவருக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்!!

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்... மனைவியின் கண்முன்னே கணவருக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்!!


Erode man death in fire accident

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கூலமூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினத்தன்று மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் அர்ஜுன் அருகில் இருந்த ஓலை குடிசையில் உறங்க சென்றுள்ளார்.

அர்ஜுன் உறங்க செல்வதற்கு முன்பாக தனது செல்போனை சார்ஜிங் போட்டு விட்டு ஓலை குடிசையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு வேலையில் திடீரென செல்போன் வெடித்து குடிசை தீப்பற்றியுள்ளது.

fire accident

அதில் கண் விழித்த அர்ஜுன் அலறி துடித்து வெளியேற முடியாமல் இருந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை. தீ உடல் முழுவதும் பரவியதில் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.