ஓடும் பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை; டிரைவர் உட்பட மூவர் கைது.

eroad cshool girl - sex tourcher - van driver


eroad-cshool-girl---sex-tourcher---van-driver

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அரைச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அவர் தினந்தோறும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வேன் ஒன்றில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவரை நோட்டமிட்ட வேன் டிரைவர் அவருடன் நைசாக பேசி பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார்.

sex torture

இந்நிலையில் திடீரென காணாமல் போன சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி கண்டுபிடித்தனர். பின்பு சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதாவது, கடந்த 22ஆம் தேதி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற வேன் டிரைவர் ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் வேன் டிரைவரையும், இச்செயலுக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.