பிரமாண்டமாக நடிகர் கிங்காங் வீட்டில் நடைபெற்ற விசேஷம்.! நேரில் சென்று வாழ்த்திய தமிழக முதல்வர்!!
பிரதமர் மோடியை சந்தித்த கையோடு அமித்ஷாவை சந்தித்தது ஏன்.? எடப்பாடி பழனிச்சாமி ஓப்பன் டாக்.!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக தலைநகர் டெல்லி சென்றுள்ளனர். நேற்று டெல்லியில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும், கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது. அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சனை, சசிகலாவின் செயல்பாடுகள் போன்றவை பற்றி அவர்கள் பிரதமரிடம் பேசியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை, தமிழக அரசு அ.தி.மு.க. மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது. அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.