இ.பாஸ் கிடைக்காததால் தமிழக, கேரள எல்லை பகுதியில் நடைப்பெற்ற திருமணம்.!

இ.பாஸ் கிடைக்காததால் தமிழக, கேரள எல்லை பகுதியில் நடைப்பெற்ற திருமணம்.!



epass-kidaikathathala-iru-manilangalilum-ellai-pakuthil

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சன். இவருக்கு கேரளா மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து ஏற்ப்பட்டு வரும் ஊரடங்கால் அவர்களின் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடத்த முடியாமல் போனது. 

அதனை அடுத்து இவர்களின் திருமணத்தை ஜீன் 7 ஆம் தேதி நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதனை அடுத்து மணமக்கள் இருவரும் இடுக்கி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆன்லைனில் இ.பாஸ் விண்ணப்பித்தனர். அதில் மணமகளுக்கு இரு மாநிலங்களிலும் அனுமதி கிடைத்த நிலையில் மணமகனுக்கு இடுக்கியில் இ.பாஸ் கிடைக்கவில்லை.

KERALA

இதனால் இருவீட்டாரும் திருமணத்தை தமிழக, கேரளா எல்லை பகுதியில் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இவர்களின் திருமணம் இரு மாநிலங்களின் எல்லை பகுதியில் பாய் விரித்து, தாம்பூலங்கள் மாற்றி எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளனர். 

இவர்களின் திருமணத்திற்கு கேரள போலீசார், சுங்கத்துறையினர், சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அதனை அடுத்து மணமகளுக்கு கோவை மாவட்டத்தில் இ.பாஸ் கிடைத்தமையாமல் மணமகனுடன் கோவை புறப்பட்டார்.