ஆம்புலன்ஸில் பிரசவ வலியுடன் சென்ற கர்ப்பிணி பெண்.! சாலையை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்.! அடுத்து நடந்தது என்ன?

ஆம்புலன்ஸில் பிரசவ வலியுடன் சென்ற கர்ப்பிணி பெண்.! சாலையை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்.! அடுத்து நடந்தது என்ன?


elephant stiped ambulance

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே உள்ள போல்காகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருடைய மனைவி பசவராணி. நிறைமாத கர்ப்பிணியான பசவராணிக்கு கடந்த 20-ந் தேதி இரவு பிரசவவலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சாலையில் வாகனத்தின் முன்பு 12 காட்டுயானைகள் வழிமறித்து நின்றுள்ளன. இதனால் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். தொடர்ந்து 40 நிமிடங்கள் 12 காட்டு யானைகளும் ஆம்புலன்சிற்கு முன்பே நின்றதால் ஆம்புலன்ஸ் அசையாமல் ஒரே இடத்தில் நின்றது.

இதனையடுத்து ஒருகட்டத்தில் அனைத்து யானைகளும் நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்ட சிறிது தூரத்திலேயே ஆம்புலன்ஸில் பசவராணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையும் தாயும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.