வைரல் வீடியோ: பாகனிடம் பேசும் அதிசய கோவில் யானை.. அதிசயம் ஆனால் உண்மை.. வீடியோ பாருங்க.Elephant speaking with its keeper viral video

கோவில் யானை ஒன்று பாகனிடம் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோவிலின் கோவில் யானை ஆண்டாள் அதன் பாகன் ராஜேஷிடம் தனக்கே உரிய மொழியில் பேசுகிறது. குறும்புக்கு பெயர் போன இந்த ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோவிலில் கடந்த 36 ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில் யானை ஆண்டாளும், அதன் பாகன் ராஜேஷும் சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது திடீரென யானை ஆண்டாள் சாலையிலையே நின்றுவிடுகிறது. உடனே யானையை பார்த்து வரமாட்டியா என பாகன் கேட்க, அதற்கு யானை தனது மொழியில் வரமாட்டேன் என பதில் கூறுகிறது.

இந்த அழகான காட்சியை இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்த நந்தா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது...