தேவர் ஜெயந்தி விழா.! ஒன்றாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின்.!



edpadi palanisami nd mk stalin went to pasumpon

தேவர் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், விவசாயிகளுக்கும் பெரிதும் போராடிய பசும்பொன் தேவர் அவர்களுக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இன்று வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என  ஸ்டாலின் தெரிவித்தார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது! தமிழ்ப்பற்று, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அவர் காட்டிய பொதுவாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க தேவர்ஜெயந்தி-யில் உறுதியேற்போம்! என தெரிவித்துள்ளார்.