பதவியை பறித்த எடப்பாடி பழனிச்சாமி.. வேலையை காட்டிய செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.! ஈரோட்டில் பரபரப்பு.!



Edappadi Palaniswami Expels Sengottaiyan from the AIADMK Party Erode KAS Office Reaction 

டிடிவி தினகரன், சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருடன் இணக்கமாகிய கே.ஏ. செங்கோட்டையனின் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் பறித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இபிஎஸ் செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடம் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப்பதவி பறிப்பில் ஈடுபட்டது மிகப்பெரிய கவனத்தை பெற்றது. 

ஓரணியில் இணைந்தனர்:

இந்த விஷயத்துக்கு பின்னர் கே.ஏ செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியாமல் அதிமுக தலைமையும் அமைதி காத்து இருந்தது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை ஜெயந்திக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் நேரில் சென்று மரியாதையை செய்தனர். 

இதையும் படிங்க: #Breaking: எடப்பாடி பழனிச்சாமி Vs செங்கோட்டையன் விவகாரம்; இபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

politics

இன்று விளக்கம் & பேட்டி:

இதனால் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கே.ஏ. செங்கோட்டையனுக்கு எதிராக போர்க்கொடி எழுந்தது. இந்த பரபரப்பு சூழ்நிலையில் செங்கோட்டையனை கட்சியின் பொறுப்பில் இருந்து பறித்து அதிரடியாக அதிமுக தலைமை உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கும் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவதாகவும் கே.ஏ. செங்கோட்டையன் கூறி இருக்கிறார். 

புகைப்படம் மறைப்பு:

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கும் கே.ஏ செங்கோட்டையனின் அலுவலகத்தில், அதிமுக போஸ்டரில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் முகம் மறைக்கப்பட்டு, அதில் ஜெயலலிதாவின் படம் கூடுதலாக ஒட்டப்பட்டுள்ளது. கோவையில் விவசாயிகள் முன்னெடுத்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லை என செங்கோட்டையன் எதிர்ப்பு தொடங்கி, இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரின் அரசியல் நகர்வுகள் கவனிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: "எள்ளு வய பூக்களையே..." அதிமுக - வில் மீண்டும் விரிசல்.!! மாஜி அமைச்சர் பிரஸ் மீட் அறிவிப்பு.!!