#JUSTIN: எபோலோ வைரஸ் பரவல்.. மத்திய அரசு அதிரடி.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு..!
எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் உத்தரவுகளை அமல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:
ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையாக உலக நாடுகளுக்கு அறிவித்து இருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவில் எபோலா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக அனைத்து மாநிலத்துக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
இதையும் படிங்க: Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

கண்காணிப்பு வேண்டும்:
இந்தியாவில் எபோலா பரவல் இல்லை என்றாலும், சர்வதேச பயணிகள் வருகை-புறப்பாடு விஷயங்களில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை உட்பட பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் பயண விபரம், சுய பயண விபரம், வெப்ப பரிசோதனை போன்றவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அறிவுறுத்தல்:
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சமீபத்தில் பயணம் செய்து வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, சந்தேகிக்கப்படும் நபர்களின் மாதிரிகளை சேகரித்து புனே பரிசோதனை மையத்துக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப பரிசோதனையை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் குறித்த சந்தேகிக்கப்படும் பயணியை கையாளவும், உரிய சிகிச்சை அளிக்கவும் பிரத்தியேக மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் உட்பட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: யாருகிட்ட உங்க ஆட்டம்லா.... டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!