மது பழக்கத்தால் கொடூரம்... மனைவி கழுத்தறுத்து படுகொலை.!! கணவன் தற்கொலை.!! வில்கிய மர்மம்.!!
திருப்பூர் நகரில் மனைவியை வெட்டி கொலை செய்த நபர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மீட்கப்பட்ட கணவன் மனைவி சடலங்கள்
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் சிலம்பரசன் என்ற நபர் வசித்து வந்தார். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி வெட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வெளியான உண்மை
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறை நடத்திய விசாரணையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலம்பரசன் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மது போதை காரணமாக கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: முகம் சிதைந்த சடலம்... அதிர்ச்சியில் பொது மக்கள்.!! நடந்தது கொலையா.? காவல்துறை விசாரணை.!!
மது பழக்கத்தால் அதிகரிக்கும் வன்முறை
சமீபகாலமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் மது குடித்துவிட்டு வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது பொதுமக்களை அச்சமும் கவலையுமடையச் செய்திருக்கிறது. மேலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது.
இதையும் படிங்க: "ஐயோ கொல்ல பாக்குறாங்க.." பைக்கை மறித்து மனைவிக்கு வெட்டு.!! கணவன் வெறி செயல்.!!