மது போதையில் தகராறு.. இளைஞர் பீர் பாட்டிலால் குத்தி கொடூர கொலை.!Drunken boys killed friends in madurai

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

madurai

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தது தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சக்தி, வசந்த ,விக்னேஷ், திருமூர்த்தி இஸ்மாயில் ஆகியோர் உச்சம்பட்டி துணைக்கோள் நகர் பகுதிக்கு வந்து மது அருந்தி உள்ளனர். அடுத்த சிறிது நேரத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு ஒருவர் வேறுபாட்டினால் இஸ்மாயிலை குத்தியுள்ளார்.

madurai

இதனால் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறியாத அவரது நண்பர்கள் மது போதையில் தூங்கி விட்டனர். மறுநாள் போதை தெளிந்து இஸ்மாயில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உடலை முற்பதற்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்தி, வசந்த், விக்னேஷ், திருமூர்த்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.