குடிபோதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்கள்.. பேருந்து நிலையத்தில் நடந்த பயங்கரம்..!! Drunken boys killed a man

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூனக்குளம் புது தெரு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 60). இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியைச் சார்ந்தவர் கோகுல் அலெக்ஸ் சிந்தர் (வயது 28). மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பேச்சிமுத்து (வயது 42). 

நண்பர்களான மூவரும் மதுபானம் அருந்தும் நேரத்தில் ஒன்றாக கூடி மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிடம், மதுபோதையில் வந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சுமுத்து இருவரும் தங்களது செல்போன் தொலைந்துவிட்டது என கேட்டுள்ளனர்.

tamilnadu news

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, மாரிமுத்துவை இருவரும் சரமாரியாக அடித்து தூக்கி வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்துறையினர் அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்ததற்காக கோகுல் அலெக்சாண்டர், பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.