மதுபோதையில் ஏற்பட்ட தகராறு.. கூலித் தொழிலாளி அடித்து கொலை.!Drunken boys fight one death in ranipet

ராணிப்பேட்டை அருகே மதுபோதையில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், தனியார் கல்லூரியில்  மாஸ்டராக வேலை செய்யும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Ranipet

இந்த வாய்த்தகராறு கைகளப்பாக மாறிய நிலையில் கமலக்கண்ணன், மகாதேவனை பிடித்து கீழே தள்ளியுள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டில் தலை மோதி பலத்த காயமடைந்தார் இதனையடுத்து மகாதேவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

Ranipet

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகாதேவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கமலக்கண்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.