ஓசியில் மளிகை பொருட்கள் கேட்டு தகராறு செய்த மதுபோதை ஆசாமிகள்.. உரிமையாளருக்கு ஏற்பட்ட கொடூரம்!Drunken boys attack Store owner

திருவள்ளூர் அருகே ஓசியில் மளிகை பொருட்களை கேட்டு உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த மேல் நல்லத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டறை எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவர் பட்டறை-அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு மது பாதையில் வந்த 2 மர்ம நபர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் தர மறுத்துள்ளனர்.

thiruvallur

இதனால் கடையின் உரிமையாளர் ஆறுமுகசாமி பொருள் தர முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், நாங்கள் யார் தெரியுமா என்று கேட்டு ஆறுமுகசாமியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆறுமுகசாமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே ஆறுமுகசாமியின் மகன் தேன்ராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.