குடிபோதையில் நடந்த தகராறு.. 2 பேர் துள்ளத்துடிக்க சாவு.. மதுவரக்கனின் மதியிழக்க வைத்த கொடூரத்தனம்.!

குடிபோதையில் நடந்த தகராறு.. 2 பேர் துள்ளத்துடிக்க சாவு.. மதுவரக்கனின் மதியிழக்க வைத்த கொடூரத்தனம்.!


drunken-boy-killed-his-2-friends-in-chennai

மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள திருவான்மியூர், மீனவர் குப்பம் பகுதியில் வசித்து வருபவர்கள் அருண், சதீஷ், தினேஷ் இவர்கள் மூவரும் சிறுவயதிலிருந்தே உயிர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து தற்போது வேலையில்லாமல் ஊர்சுற்றி வரும் நிலையில், நேற்றிரவு மூன்று பேரும் அதே பகுதியில் நடைபெற்ற 16ஆம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு நன்றாக குடித்துவிட்டு உணவருந்திய நிலையில், விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த அருண், தினேஷ் மீது செருப்பை கழட்டி எரிந்துள்ளார். இதில் தினேஷின் உணவில் மண் விழுந்த காரணத்தால், அவர் கோபமுற்று வாக்குவாதம் செய்துள்ளார். 

chennai

இருவருக்குமிடையேயான வாக்குவாதம் சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், அருணுக்கு உதவியாக சதீஷும் சேர்ந்து தினேஷை தாக்கியுள்ளார். இதில் மிகவும் ஆவேசமடைந்த தினேஷ் அங்குள்ள மீன் வெட்டும் கத்தியை எடுத்து சதீஷையும், அருணையும் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் குடல் சரிந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நண்பர்களை கொலை செய்த குற்றத்திற்காக தினேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.