போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறிய போதை ஆசாமிக்கு தர்ம அடி!
![Drunken boy harassment to police wife](https://cdn.tamilspark.com/large/large_arrest-50298.jpg)
போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறிய போதை ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி வீட்டில் முன்பாக செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த போதை ஆசாமி ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட அருகில் இருந்த காவலர்கள் ஓடி வந்து போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.