புதுக்கோட்டையில் மதுகிடைக்காத விரக்தியில் மேலும் ஒருவர் பலி!Drink adict man died


கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன. 

 

சமூக விலகலுக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் மதுக்கடை எப்போது திறக்கப்படும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டையில் மது கிடைக்காத விரக்தியில் மாற்று வழியில் போதைக்கு உள்ளான இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீனவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அசன்மைதீன் (33), ராமநாதபுரம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (30), கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்வர்ராஜா (34). இவர்கள் மூவரும் மாற்று போதை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

drink

இவர்கள் மூவரும் ஏப்ரல் 2ஆம் தேதி பிற்பகலில் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குதித்துள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி உடல் நலக்குறைவால் மணமேல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அசன்மைதீன், அருண்பாண்டியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர். இந்தநிலையில் ஐடியா கொடுத்த அன்வர்ராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அன்வர்ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்தநிலையில் மாற்று போதை முயற்சியில் ஈடுபட்ட மூவரும் உயிரிழந்துள்ளனர்.