#Breaking: குப்பைக்கு போகப்போகும் திமுக ஆட்சி.. திராணி இருக்கா உங்களுக்கு? தவெக விஜய் சரமாரி கேள்வி.! 



Does the DMK Have the Grit? TVK Leader Vijay Launches Scathing Attack at Salem Public Meeting

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் தனது கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கினார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், "Gen Z இளைஞர்களுக்கும், சிறார்களுக்கும் நான் சொல்ல வேண்டும். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி ஏமாறும் பழக்கம் மாற வேண்டும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களையும் யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்களின் ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான். வேறு யாரையும் நம்பி ஏமாறமாட்டோம் என வாக்குறுதி எடுங்கள். இனிமேல் நீங்க கொள்ளையடித்து வைத்த பணத்தை குப்பையில் தான் போட வேண்டும். ஊழல் ஆட்சியும் குப்பைக்கு செல்லப்போகிறது. எனது குட்டி நண்பா அனைவர்களுக்கும், உங்களையும் உங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் வைத்து அரசியலுக்கு வந்துள்ளேன். நான் பல வீடியோக்களை பார்க்கிறேன். நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டால், அம்மா விஜய் னு சொல்லுங்க என பேசும் வீடியோ பார்க்கிறேன். அதனை தொடர்ந்து செய்யுங்கள். 

உங்களுக்கான சொந்த அடையாளம் இருக்குதா?

உங்களின் வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா என அனைத்து உறவினர்களையும் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட சொல்லுங்க. நாங்கள் அரசியலுக்கு வந்தது வன்மம், கோபம் இல்லை. வெறுப்பு அரசியல் செய்ய நாங்கள் வரவில்லை. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கும் எண்ணம் இல்லை. மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே வந்துள்ளோம். அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரம் செய்ய முடியும் என அழுகிறார்கள். அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர வேறு எதாவது அனுபவம் இவர்களுக்கு உண்டா?. பிறர் ஆரம்பித்த அரசியல் கட்சியில், பிறரின் முகவரியில் அரசியவாதிகளாக இருக்கும் அனைவருக்கும் சவால். என்னைப்போல சொந்த கட்சி ஆரம்பித்து 1% வாக்கு வாங்கிக்காட்டும் திராணி இருக்கிறதா? 

இதையும் படிங்க: #Breaking: காசு கொடுத்தா காதுல விசில ஊதி அனுப்புங்க.. விஜய் அனல்பறக்க பேச்சு.! 

Vijay Salem Speech

ஊழல் சுட்டுப்போட்டாலும் வராது:

30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து, இன்று மிகப்பெரிய அரசியல் இயக்கமாக வளர்ந்து 70 ஆண்டு கட்சிகளை மீறி, இன்று களத்தில் தனியாக இருந்து 2 ஆண்டுகளில் முதன்மை சக்தியாக தவெக வளர்ந்துள்ளது. நமக்கு அனுபவம் இல்லையா? உங்களின் அனுபவம் அண்ணா, MGR, ஜெயலலிதாவை மறந்தது தான். இவர்கள் சொன்னது, பேசியதை மறந்தது. கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை. அது எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. கொள்கையை பெயரில் வைத்துக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சரண்டர் ஆகுவது எங்களுக்கு வராது. நல்ல ஆட்சிக்கு காமராஜர், எம்ஜிஆர் போல மக்கள் சக்தியின் துணையால், மக்கள் அதிகாரத்தின் ஆட்சியாளர்களால் செய்ய முடியும். அதனை என்னால் செய்ய முடியும். நானும் செய்து காட்டுகிறேன்" என பேசினார்.