#Breaking: காசு கொடுத்தா காதுல விசில ஊதி அனுப்புங்க.. விஜய் அனல்பறக்க பேச்சு.! 



vijays-fiery-speech-shakes-salem-rally

சேலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தேர்தல் அனுமதி நடைமுறைகளில் உள்ள பாரபட்சம், SOP நடைமுறை, கூட்டணி அரசியல் மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் விவகாரங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார்.

தவெக தலைவர் விஜய் பேச்சு:

சேலம் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, "பவர் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால், நம்மை கிண்டல் செய்யும் இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். அதில் இருந்து நாம் ஆரம்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வா என கேக்கும் நபர்களுக்கு எனது வீடு எங்கு உள்ளது என தெரியுமா? என்னை சீண்டிப்பார்க்க நினைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லவா? தமிழ்நாடு பிறருக்கு மாநிலம். எனக்கு அதுதான் வீடு. எனது வீட்டில் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். எனக்கு அனைத்தையும் கொடுத்த மக்களுக்கு துணை நிற்கப்போவது விஜய் தான். அதுதான் எனது குறிக்கோள். 

Vijay Salem Speech

இதையும் படிங்க: விசில் சத்தம் தாங்க முடியலையா? அச்சத்தின் உச்சத்தில் தமிழக அரசு.. தவெக விஜய் கடும் தாக்கு.!

அரசியலுக்கு வந்த காரணம்?

உங்க விஜய் உங்ககிட்ட ஓட்டுகேட்டு வரவில்லை, நீதிகேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதிகேட்க அரசியலுக்கு வந்தேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தான்? தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். மக்களுக்காக மட்டும் நான் வந்தது தவறா? பெரிய கட்சிகளுக்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி உண்டு. நமக்கு ஏதும் இல்லை. இது என்ன நியாயம்? நான் சென்று மக்களை சந்திக்க, மக்கள் வந்து என்னை சந்திக்க அனுமதி கொடுக்கப்படாதது ஏன்? இது என்ன நியாயம். 

Vijay Salem Speech

விசில் ஊதி அனுப்புங்க:

SOP என்பது Standard Operation Procedure. இது எனக்கு மட்டும் Stalin Operation Procedure. விஜய் உண்மையானவன். உங்களிடம் நான் வந்து நீதி கேட்காமல் வேறு யாரிடம் சென்று கேட்பேன். Self எடுக்காத கூட்டணி கணக்கு வேலைக்கே ஆகாது. அதனை ஆணித்தரமாக சொல்கிறேன். காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும் விஜய் வந்ததும் நடக்காது. வண்டி வண்டியாக 1000, 2000 கொடுத்து சத்தியம் வாங்குவாங்க. அவுங்க கொடுக்கிறதை வாங்கிகிட்டு, அவுங்க காதுல விசில ஊதி அனுப்புங்க" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தோல்வி பயத்தில் அஞ்சி ஆயிரம்.. கோடைக்கால சிறப்புத் தொகை - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!