வெறும் 580 கிராம் எடையும் பிறந்த குழந்தை! அடுத்தடுத்து நடந்த அதிசயம்! நெகிழ்ச்சியில் பெற்றோர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சமந்தம்பேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு கடந்த மே மாதம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை வெறும் 580 கிராம் மட்டுமே எடையுடன் இருந்துள்ளது. இதனால் குழந்தையை காப்பாற்றமுடியுமா என்ற சந்தேகத்துடன் பெற்றோர் மருத்துவர்களை அணுக, அவர்கள் மருத்துவமனை பச்சிளம் குழந்தை பிரிவில் அந்த குழந்தையை சேர்த்தனர். அங்கு 24 மணி நேரமும் கண்காணித்து குழந்தையை பராமரித்து வந்தனர்.
கிட்டத்தட்ட 5 மாதங்களாக செயற்கை சுவாச உதவியுடன் இன்குபேட்டரில் வைத்து குழந்தை வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
5 மாதங்களாக நடந்த இந்த போராட்டத்தில் மருத்துவர்கள் வெற்றிபெற்று தற்போது அந்த குழந்தை போதிய எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் குழந்தையை மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்ததை அடுத்து அந்த குழந்தைக்கு ஜான்சி ராணி என பெயர் வைத்துள்ளனர்.