இரட்டை இலை சின்னம் வேண்டுமா..? இருவரின் கையெழுத்தை கேட்கும் தேர்தல் ஆணையம்... அதிர்ச்சியில் தொண்டர்கள்...!

இரட்டை இலை சின்னம் வேண்டுமா..? இருவரின் கையெழுத்தை கேட்கும் தேர்தல் ஆணையம்... அதிர்ச்சியில் தொண்டர்கள்...!


Do you want a double leaf symbol..? The Election Commission is asking for the signatures of both...

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரின் கையெழுத்து இருந்தால் தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். 

மேலும் இரட்டை இலை சின்னத்திற்கான படிவத்தை அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் ஒரு கட்சியை கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.