
Dmk person died for corona
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பிரமுகா் நேற்று உயிரிழந்தாா். மேலும், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்திலேயே, திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் வரை, 95 ஆயிரத்து, 430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 93 ஆயிரத்து, 269 முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை, 4,453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
Advertisement