திமுக எம்பி-யின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.! கதறி துடித்த குடும்பத்தினர்.!



Dmk mp son passed away

திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ்(வயது 22) புதுச்சேரியிலிருந்து இன்று சென்னை திரும்பியபோது, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இதனையடுத்து காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ராகேஷ் உடல் காரினுள் மாட்டிக் கொண்டதால் சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, சாலை விபத்தில் உயிரிழந்த அவரது மகன் திரு. ராகேஷ் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.