அரசியல் தமிழகம்

கொரோனா சமயத்தில் மரணமடைந்த திமுக எம்.எல்.ஏ-வின் மகன்! சோகத்தில் மூழ்கிய கட்சியினர்!

Summary:

Dmk mla son died

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உடல்நல குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மொய்தீன் கான்.  தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2006ம் ஆண்டு அக்கட்சியின் ஆட்சி காலத்தில் தமிழக முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தவர்.  இதே தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.


இவரது மகன் காஜா பீர் முகமது உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். எம்.எல்.ஏ மகனின் திடீர் மரணம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா சமயத்தில் ஏற்பட்ட இந்த மரணத்தால் கட்சியின் உறுப்பினர்கள் பலரால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. எம்.எல்.ஏ மைதீன்கானுக்கு திமுக முன்னணியினர் சமூக வலைத் தளம் மூலமாகவும் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement