BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
காருடன் தேங்கியிருந்த நீருக்குள் சிக்கிய முன்னாள் திமுக அமைச்சரின் மகன்; உயிர்தப்பிய அதிஷ்டம்.!
முன்னாள் திமுக அமைச்சர் தமிழ் குடிமகனின் மகன் பாரி. இவர் தனது மகள் பயின்று வரும் கல்லூரிக்கு செல்ல, திருப்பரங்குன்றம் பகுதி வழியே சென்றுள்ளார்.
அப்போது, அவர் இரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்திய நிலையில், அங்கு நேற்று பெய்த மழை காரணமாக நீர் நிரம்பி இருந்துள்ளது. பதறிப்போன பாரி சுதாரிப்புடன் செயல்பட்டு உயிர் தப்பினார்.
இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு காரை அரைமணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.