அரசியல் தமிழகம் TN Election 2021

பிரச்சாரத்தின்போது நெஞ்சு புடைக்க விம்மி விம்மி அழுத திமுக வேட்பாளர்!! ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என கண்ணீர்விட்டு கோரிக்கை!!

Summary:

எனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என திமுக வேட்பாளர் கண்ணீர் சிந்திய சம்பவம் விராலிமல

எனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என திமுக வேட்பாளர் கண்ணீர் சிந்திய சம்பவம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நடந்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன், தனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் நிலையில், விராலிமலை தொகுதியானது வி.ஐ.பி. தொகுதியாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் தோல்வியை தழுவினார்.

தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளநிலையில், இந்த தேர்தலை தனது கடைசி தேர்தலாக கருதுவதாகவும், 30 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து மக்களுக்காக உழைத்துள்ள தனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு தரும்படி கெஞ்சி கேட்டுள்ளார் தென்னலூர் பழனியப்பன்.

ஏற்கனவே தேர்தலில் நின்று தோல்வியுற்றும்கூட, தொடர்ந்து மக்கள் மக்கள் பணி செய்துவரும் தனக்கு இந்த ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கூறி நெஞ்சு புடைக்க விம்மி விம்மி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சற்று சோகத்தில் ஆழ்த்தியது.


Advertisement