"முடத்தெங்கு" தவெக கூட்டணிக்கட்சிகளை விமர்சித்த திமுக ஆ. ராசா.. பதிலடி கருத்துக்களால் போர்க்களம்.!
கூட்டணியை உடைத்துச் சென்ற கட்சியை திமுக ஆ. ராசா கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
தேர்தல் முடிவால் அரசியல் மாற்றம்:
தமிழகத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி ஆட்சியை, திமுக தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, 2026 தேர்தல் முடிவுக்கு முன்பு திமுகவுடன் காங்கிரஸ், விசிக உட்பட பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு இருந்தனர். தேர்தல் முடிவுக்குப்பின் தவெகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தாலும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருந்தது.
இதையும் படிங்க: JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!
அதிகாரத்தில் பங்கு:
இதனையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளான காங்கிரஸ், விசிக உட்பட பிற கட்சிகள் ஆதரவு அளித்ததன் பேரில் அரசு அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு அமைச்சரவை பொறுப்பும் பகிர்ந்து வழங்கப்பட்டு இருக்கிறது. தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போதே தங்களுடன் கூட்டணி வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால், தவெகவுடன் யாரும் கூட்டணி வரவில்லை என்பதால், தனித்து போட்டியிட்டு வெற்றி கண்டது.

திமுக விமர்சனம்:
இதனிடையே, தங்களின் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக உட்பட கட்சிகளை திமுகவின் இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். திமுகவின் துணை பொதுச்செயலர்களில் ஒருவரும், எம்.பியுமான ஆ. ராசாவும் தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார். இதற்கு அவரின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிலடி கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு கருத்து பதிவிடும் பக்கம் போர்க்களமாக மாறி இருக்கிறது.
ஆ. ராசா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்,
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!" என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு பலரும் தங்களின் எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர் பதிவிட்டு நீக்கியதாக கூறப்படும் மற்றொரு பதிவையும் பகிர்ந்து கண்டனத்துடன் பதிலடியை முன்வைக்கின்றனர்.
ஆ. ராசாவின் வலைப்பதிவு:
என் வீட்டுத் தோட்டத்துத்
— A RAJA (@dmk_raja) May 22, 2026
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
இதையும் படிங்க: "எளியவருக்கு அதிகாரம், அதிலென்ன ஆத்திரம்" - திமுக ஆ. ராசாவுக்கு விசிக தடாலடி பதில்.!