2 பெண்களை அறையில் பூட்டிவைத்து, உணவு-தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமை.. வடக்கன் புரோக்கர் கொடூரங்கள்.!dindigul-vedachandur-north-indian-girl-workers-tortured

பிழைக்க தமிழகம் வந்த 2 பெண்களை வேலைவாங்கி கொடுக்கும் புரோக்கர் உணவு-தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில், வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியானது செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பாபு என்ற புரோக்கர் தனது சார்பில் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கவைத்து நூற்பாலைகளில் வேலைக்கு சேர்த்து விடுவது வழக்கம்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரீத்தா முனாஃகூர், போர்சா ராணி ஜெயா என்ற இளம்பெண்கள் பாபுவிடம் வேலைகேட்டு வந்த நிலையில், அறையெடுத்து தங்க வைத்து வேலை வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் கடந்த 10 நாட்களாக வேலைக்கு சென்று வந்த நிலையில், தங்களால் வேலையை கவனிக்க இயலவில்லை என்று கூறியுள்ளனர். 

மேலும், தங்களை மீண்டும் ஊருக்கே அனுப்புமாறு பாபுவிடம் கோரிக்கை வைக்கவே, அவர் இளம்பெண்களை அறைக்குள் பூட்டி வைத்து 2 நாட்களாக உணவு தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமை செய்துள்ளார். மேலும், பெண்களின் அடையாள அட்டை, செல்போன் போன்றவற்றையும் பறித்து வைத்துள்ளார். 

Dindigul

இன்று காலை இளம்பெண்கள் தங்கியிருந்த அறைக்கதவை புரோக்கர் பாபு திறந்தபோது, சுதாரித்த பெண்கள் அவரை தள்ளிவிட்டு வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தப்பி சென்றனர். கண்ணீருடன் இருந்த பெண்களை அன்புடன் கவனித்த அதிகாரிகள், உணவு வாங்கிக்கொடுத்து ஆஸ்வாசப்படுத்தனர். பின் அவர்களிடம் விசாரணை நடந்தது. 

விசாரணையின் போது பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் விவரிக்க, பெண்களின் நிலை உணர்ந்த அதிகாரிகள் இருவரையும் ஒடிசாவுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்ல துணையாக ஒருவரை ஏற்பாடு செய்து தங்களால் இயன்ற உதவியை செய்து அனுப்பி வைத்தனர்.