குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து, தாய் விபரீத முடிவு.. திண்டுக்கல் அருகே சோகம்.!



Dindigul Vathalagundu 2 Baby Murder Mother Suicide

பெற்றெடுத்த குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் கொலை செய்து, அவரும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அய்யம்பாளையம் பகுதியை சார்ந்தவர் சரவணன். அவரின் மனைவி இலட்சுமி. தம்பதிகள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், வீட்டில் இருந்து 2 குழந்தையுடன் வெளியேற்றிய இலட்சுமி, சித்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றில் குழந்தைகளை வீசி கொலை செய்து, தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

Dindigul

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.