இருசக்கர வாகனம் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி தீவிபத்து... ஒருவர் பலி...

இருசக்கர வாகனம் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி தீவிபத்து... ஒருவர் பலி...


Dindigul road accident one member died

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள செக் போஸ்ட் மேம்பாலத்தில் பேருந்து வந்த போது எதிரே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் பேருந்து சக்கரத்தில் மாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் இருந்த இரண்டு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பேருந்து மீது மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

Road accident​​​​

இதனை பார்த்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தில் பயணித்த 41 பயணிகளை காப்பாற்றினர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.