நள்ளிரவில் பதம்பார்த்த நாய்கள்; 9 ஆடுகள் பலி., 6 ஆடுகள் படுகாயம்.!Dindigul Goat Attacked by Dogs 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியாம்பரை, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 50). இவர் விவசாயி ஆவார். சொந்தமாக தனது தொட்டது 40 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். 

ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்

இந்நிலையில், நேற்று ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு வந்து, பின் காலையில் ஆட்டுப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு 9 ஆடுகள் இரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தன. 6 ஆடுகள் படுகாயத்துடன் இருந்தன. 

இதையும் படிங்க: 6 வயது சிறுமியை துரத்திக்கடித்த நாய்; சென்னையில் மீண்டும் பதறவைக்கும் சம்பவம்..!

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவர் தேவேந்திரன் நாய்க்கடியில் ஆடுகள் பலியாகி இருப்பதை உறுதி செய்தார்.

இதையும் படிங்க: தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்த பெண்... நம்பி சென்ற விவசாயிக்கு நிகழ்ந்த சோகம்...