பூச்சி கடித்ததற்கு வீட்டிலேயே டிரீட்மென்ட்.. 3 வயது பிஞ்சின் உயிரை குடித்த அலட்சியம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

பூச்சி கடித்ததற்கு வீட்டிலேயே டிரீட்மென்ட்.. 3 வயது பிஞ்சின் உயிரை குடித்த அலட்சியம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


dindigul-child-baby-died

கண்ணிற்கு தெரியாத பூச்சி கடித்ததற்கு வீட்டிலேயே மருத்துவம் பார்த்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, பிச்சம்பட்டியில் வசித்து வருபவர் பால்காளை. இவர் மரம் வெட்டும் கூலித்தொழிலாளி ஆவார். அங்குள்ள கோவிலூருக்கு கூலி வேலைக்கு செல்லும் பால்காளை மாலையில் வீட்டிற்கு வருவார். 

பால்காளைக்கு 3 வயதாகும் காவிய தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். குழந்தை தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அப்போது கண்ணிற்கு தெரியாத பூச்சி கடித்துள்ளது. இதற்கு குடும்பத்தினர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். 

Dindigul

இந்த நிலையில், வீட்டில் நேற்று முந்தினம் குழந்தை மயங்கிய நிலையில் இருக்கவே, பதறிப்போன பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.