"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
மாணவர்களை பிள்ளை போல நேசித்த ஆசிரியை மாரடைப்பால் மரணம்! அவரின் உடலில் இருந்த 12 சவரன் நகை அபேஸ்! அதிர்ச்சியில் மாணவர்கள்!
மாணவர்களை பிள்ளை போல நேசித்த ஆசிரியை மாரடைப்பால் மரணம்! அவரின் உடலில் இருந்த 12 சவரன் நகை அபேஸ்! அதிர்ச்சியில் மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்டான்லி தாஸ். இவருடைய மனைவி மேரி தெரஸா. இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இந்தநிலையில் ஆசிரியை மேரி தெரஸாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியை மேரி தெரஸா மருத்துவமனையில் இறந்து விட்டார்.
பின்னர் அவரது உடல் ஆலங்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு வந்து பார்த்த பொழுது அவரது உடலில் இருந்த செயின் வளையல் என 12 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனைப்பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி தெரஸா அவர்கள் பள்ளியில் பணியாற்றும்பொழுது ஆலங்குடியை சேர்ந்த பல மாணவர்களுக்கு இலவசமாக டியூசனும் நடத்தி வந்துள்ளார். பள்ளி முடிந்தவுடனே அந்த ஆசிரியை வீட்டிற்கு கிளம்பும்போது அவரிடம் படிக்கின்ற மாணவ, மாணவிகள் அவரின் கையை பிடித்துக்கொண்டு தனது தாயுடன் வீட்டிற்கு கிளம்புவது போலவே மாணவர்கள் அவருடன் அவரது வீட்டிற்கு செல்வார்கள். அந்த அளவிற்கு மாணவச்செல்வங்களுடன் பாசமாக பழகியவர் தான் ஆசிரியை மேரி தெரஸா.
அவரது மறைவிற்கு, அவரிடம் படித்த மாணவ மாணவிகள் நேரிலும், இணையம் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பணம் ஆசை இல்லாத, பாசத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடம் கற்பித்து மாணவச்செல்வங்களையே பெரிதாய் நினைத்து வாழ்ந்த ஆசிரியை மேரி தெரஸா அவர்களின் நகைகள் திருடுபோன செய்தி அவரிடம் படித்த மாணவர்களுக்கு பேரதிர்ச்சியாய் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.