2 நிமிட பழக்கத்தை வெகுளியாக நம்பிய 19 வயது மாணவி; விடுதியில் ரணகளம்.. காம ஆசையால் மரணவாயிலில் இளைஞர்.! சேலத்தில் பகீர் சம்பவம்.!

2 நிமிட பழக்கத்தை வெகுளியாக நம்பிய 19 வயது மாணவி; விடுதியில் ரணகளம்.. காம ஆசையால் மரணவாயிலில் இளைஞர்.! சேலத்தில் பகீர் சம்பவம்.!


Dharmapuri Man Murder Attempt in Salem While he try to abuse Girl 

 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து மருத்துவத்துறை நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சேலம் புதிய பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, அவரின் செல்போனில் பேலன்ஸ் இல்லாத காரணத்தால், வீட்டில் இருப்போரிடம் பேச அவ்வழியே வந்த 40 வயது நபரிடம் உதவி கேட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட நபர் தன்னை தர்மபுரி மாவட்டம், அக்ரஹாரம் எடப்பட்டி கிராமம், அழகிரி நகரில் வசித்து வரும் சக்திதாசன் (வயது 39) என அறிமுகம் செய்து இருக்கிறார். இளம்பெண்ணும் உதவி கேட்ட காரணத்தால், தான் நீட் தேர்வுக்காக தயாராகி வரும் மாணவி என கூறியுள்ளார். 

இதனையடுத்து, சக்திதாசன் மாணவியை தனது வலையில் வீழ்த்தும்பொருட்டு தான் "எம்.எஸ்சி., விலங்கியல் மற்றும் பி.எச்.டி படித்துள்ளேன், நீட் தேர்வுக்கு உதவி செய்கிறேன்" என தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டுள்ளனர். இதனிடையே, நீட் தேர்வுக்கு மாணவி வைத்திருந்த கல்வி கட்டணம் தொலைந்துவிட்டது என கூறியதால், சக்திதாசன் ரூ.4500 பணம் கொடுத்து உதவியுள்ளார்.

நேற்று தான் சேலம் வருகிறேன், நீட் குறித்து சந்தேகம் இருந்தால் கேட்குமாறு மாணவிக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதன்படி, சேலம் புதிய பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்க, மாணவியை அங்கு வரவழைத்தவர், தேர்வு குறித்து கூறி இருக்கிறார்.

பின் திடீரென பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, சக்திதாசன் கத்தியை காண்பித்து ஆசைக்கு இணங்க மிரட்டி இருக்கிறார். அச்சமயம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படவே, இளம்பெண்ணை சக்திதாசன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் பெண்ணின் கையில் காயம் ஏற்பட, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பெண்மணி கத்தியை பிடுங்கி சக்திதாசனை சரமாரியாக குத்தினார். பின் கதவை திறந்து வெளியே வந்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன விடுதி ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சக்திதாசனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை திருமணம் ஆகாத சக்திதாசன் வீட்டுக்கடன், விவசாய கான் வாங்கி கொடுத்து கமிஷன் தொகையில் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 

அவர் இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தை தவறாக பயன்படுத்த நினைத்து, தற்போது உயிருக்கு போராடும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.