தமிழகம்

தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகள்! ஒரு வருடம் கழித்து 5 மாத கர்ப்பிணி மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்!

Summary:

Deepika acid

காவல் துறையிலிருந்து விருப்பு ஓய்வு பெற்றவர் பாலகுமார். இவரது மகள் தீபிகா, இவர் தந்தையின் எதிர்ப்பை மீறி அதே பகுதியை சேர்ந்த சாய் குமார் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கும் தீபிகாவை பார்க்க அவரது தந்தை பாலகுமார் வந்துள்ளார். அப்போது அவர் தீபிகாவை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகுமார் தன்னுடன் வந்த மற்ற நான்கு பேருடன் தீபிகாவின் முகத்தில் அமிலம் கலந்த ரசாயனத்தை பூசியுள்ளனர். அதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் அந்த வீட்டின் மற்றொரு மருமகள் சந்தியா என்பவரின் முகத்திலும் அமிலத்தை பூசியுள்ளனர். 

மேலும் அமிலம் பூசியதில் மயக்கமான தீபிகாவை அவரது தந்தை அவர் கொண்டு வந்த காரில் கடத்தி சென்றுள்ளார். அதன் பிறகு சம்பவம் அறிந்து சாய்குமாரின் தந்தை பாலாஜி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

இதற்கிடையில் தீபிகாவை அவரது தந்தை வேப்பம் பட்டு பகுதியில் நடுரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதனை அடுத்து தீபிகாவிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது தந்தை சாய்குமாரை விட்டு பிரித்து வராவிட்டால் தன்னை கொன்று விடுவதாக கூறி தன்னை அடித்து உதைத்ததாக கூறியுள்ளார்.மேலும் தலைமறைவான பாலகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

 


Advertisement