தமிழகம்

பன்னீர் பட்டர் மசாலாவுக்காக இப்டி பண்ணிட்டியேமா...கதறும் தாய்.!

Summary:

பன்னீர் பட்டர் மசாலாவுக்காக இப்டி பண்ணிட்டியேமா...கதறும் தாய்.!

சென்னை பழைய பெருங்களத்தூர், பாரதி நகரை சேர்ந்தவர் கோவர்தன், இவர் தெலுங்கானா மாநிலத்தில்பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி வசுந்தரா ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கோவர்தன் தெலுங்கானா மாநிலத்தில் வேலை செய்துவரும் நிலையில், வசுந்தரா தனது மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

வசுந்தராவின் இளைய மகள் ஹினாகிராஸ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ஹினாகிராஸ் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு பன்னீர் பட்டர் மசாலா வேண்டும் என்று தனது தாயாரிடம் ஹினாகிராஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனது மகளின் உடல்நிலையை கருதி மகள் கேட்டதை வசுந்தரா வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹினாகிராஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹினாகிராஸ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement