எங்க அப்பா சடலத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.! மருத்துவமனை நிர்வாகத்தை கதிகலங்க வைத்த மகள்.!

எங்க அப்பா சடலத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.! மருத்துவமனை நிர்வாகத்தை கதிகலங்க வைத்த மகள்.!


daughter-not-taking-her-fathers-body-for-hospital-makin

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமசாமி மற்றும் இவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருவரும் மார்த்தாண்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ராமசாமியின் மனைவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

தொடர்ந்து 12 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது உடலை வாங்குவதற்காக உறவினர்கள் வந்த போது, மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக தற்போது வரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தபட்ட நிலையில் மேலும் 3 லட்சம் ரூபாய் கட்டினால் தான் சடலத்தை தருவோம் என்று கூறியுள்ளனர்.

corona

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மகள்  ஜாஸ்மின் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையென்றும், தந்தையின் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம், அவரின் சடலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. சில தனியார் மருத்துவமனைகள் இந்த கொரோனாவை பயன்படுத்தி மக்களிடம் பணத்தை ஏமாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் ஜாஸ்மின் செய்த செயலை பலரும் வரவேற்றுள்ளனர்.