தமிழகம்

தங்கத்தை உள்ளாடையில் மறைத்து வைத்து கூலாக வந்த நபர்.! தனியறையில் வைத்து சோதனை செய்ததில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புடைய

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புடைய 495 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். 

அப்போது அந்த விமானத்தில் இருந்து இறங்கிவந்த திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி என்ற நபரை சந்தேகத்தின் பேரில், அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அவரிடம் எதுவும் சிக்கவில்லை.

இதனையடுத்து அந்த நபரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இதனையடுத்து அவர் பதுக்கி வைத்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கலையரசன் கருணாநிதியை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


Advertisement