வித்தியாசமா தெரிந்த நபரின் தலை..! கூப்பிட்டு சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

வித்தியாசமா தெரிந்த நபரின் தலை..! கூப்பிட்டு சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.


custom-officers-found-gold-in-chennai-airport

அயன்பட பாணியில் தங்கம் கடத்திவந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுககளில் இருந்து தங்கம் கடத்திவரப்படும் சம்பவம் தற்போது அதிகரித்துவருகிறது. அதேபோல் கடத்திவரப்படும் தங்கங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைபற்றிவருகின்றனர். அந்தவகையில் ஃபிளை துபாய் எஃப்இசட் 8515 விமானத்தில் துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சோதனையில் இறங்கிய அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தபோது இருவரின் சிகை அலங்காரம் மீது சந்தேகம் எழுந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் அடியில் 698 கிராம் எடை கொண்ட தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மஹ்ரூப் அக்பரலி (39) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் (26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதே விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (42) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரது உடலில் தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்து அதிகாரிகள் 622 கிராம் தங்கை பிரித்தெடுத்தனர்.

தற்போது அனைவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் திரைப்பட பாணியில் தங்கம் கடத்திவந்த சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.