காலம்போன கடைசியில் மருமகன் மாமியாருக்கு செய்த பெரும் கொடுமை.. அரங்கேறிய பயங்கர சம்பவம்.!

காலம்போன கடைசியில் மருமகன் மாமியாருக்கு செய்த பெரும் கொடுமை.. அரங்கேறிய பயங்கர சம்பவம்.!


Cuddalore Veppur Man Fired his Mother In Law House due to Dowry Issue

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், சிறுபாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஐயம்பெருமாள். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் மனைவி ஜோதி (வயது 79), தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து, அக்கிராமத்தில் உள்ள வீட்டில் தனியே வசித்து வருகிறார்.

ஜோதியின் மூத்த மகளான வினோத செல்வியின் (வயது 45) கணவர் ஜெயவேல் (வயது 59). இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயவேல் தனது மாமியாரிடம் சென்று 50 சவரன் நகையும், இருசக்கர வாகனமும் வாங்கி தர வேண்டும் என்று மதுபோதையில் ரகளை செய்துள்ளார். 

வினோத செல்வி - ஜெயவேல் திருமணத்தின் போதே 3 ஏக்கர் நிலம் ஜெயவேல் பெயரில் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நான் வறுமையில் தனியாக வசித்து வருகிறேன். என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என்று ஜோதி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயவேல், ஜோதியின் கூரைவீட்டிற்கு தீ வைத்துள்ளார். 

Cuddalore

இதனால் பதறிப்போன ஜோதி அலறியடித்து வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து, வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அனைத்தாலும், அதற்குள் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிறுபாக்கம் காவல் துறையினர், ஜெயவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். காலம்போன கடைசியில் தனிமையில் வாழ்ந்து வந்த மாமியார் வீட்டிற்கு, பேரக்குழந்தைகள் உள்ள மருமகன் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.