குளிர்காலங்களில் மக்களே கவனம்.. ஷூவுக்குள் இருந்து மீட்கப்பட்ட குட்டி நாகப்பாம்பு..!



Cuddalore Semmandalam Snake Rescued Safely

காலனிக்குள் பதுங்கியிருந்த பாம்பு பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

மழைக்காலங்களில் பாம்புகள் பொதுவெளிகளில் இருக்க இடம் இல்லாததால், கதகதப்பான இடங்களை தேடி வீடுகள் மற்றும் வாசலில் நாம் வைத்துள்ள பொருட்களில் தங்கிவிடும். 

இவை பெரும்பாலும் நாம் வைத்திருக்கும் ஷூ போன்ற காலனிகளுக்குள் தங்குவது இயல்பு. சில நேரங்களில் இருசக்கர வாகனத்திலும் பின்னிப்பிணைந்து இருக்கும். இந்த நிலையில், ஷூவுக்குள் இருந்த குட்டி நாகம் மீட்கப்பட்டுள்ளது. 

Cuddalore

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம் குடியிருப்பை சேர்ந்தவரின் வீட்டிற்குள் புகுந்த குட்டி நாகப்பாம்பு, அங்கிருந்த ஷூவுக்குள் புகுந்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் செல்வா என்ற நபருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த பாம்பு பிடிக்கும் ஆர்வலரான செல்வா, பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்.