11 வருஷமாச்சு.. கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில்.! அவரது அழகிய மகனை பார்த்தீங்களா!!
மகளை சீரழிக்க உடந்தையாக தாய்.. சிறுமியின் சகோதரருக்கு வீடியோ அனுப்பிய தாயின் கள்ளக்காதலன்.. பேரதிர்ச்சி சம்பவம்.!

தாயின் கள்ளக்காதலனால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், கற்பழிப்பு விடியோவை சிறுமியின் சகோதரர்களுக்கு அனுப்பி வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கும் காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, பத்திரக்கோட்டை கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் அம்சவள்ளியுடன் வசித்து வருகிறார்.
சிறுமிக்கு 2 சகோதரர்கள் உள்ள நிலையில், சகோதரர்கள் சென்னையில் இருக்கும் பாட்டி வீட்டில் இருக்கிறார்கள். இதற்கிடையே, பண்ரூட்டி புதுபிள்ளையார்குப்பம் பகுதியை சார்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பவருக்கும், அம்சாவளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, கார்த்திகேயன் அம்சவள்ளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதும் வாடிக்கையாகியுள்ளது. நேற்று முன்தினம் அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்ற கார்த்திகேயன், அம்சவள்ளியின் மகளை மிரட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடூரத்தினை வீடியோவாக பதிவு செய்து சிறுமியின் சகோதரர்களுக்கும் கார்த்திகேயன் அனுப்பி வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பண்ரூட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர். மேலும், விசாரணையில் சிறுமியின் தாயும் இக்கொடூரத்திற்கு உடந்தையாக இருந்தது அம்பலமானது.
சிறுமியின் தாய் அம்சவள்ளியும் கார்த்திகேயனுடன் தலைமறைவாகி இருப்பதால், கார்த்திகேயன் மற்றும் அம்சவள்ளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.