குழந்தையில்லாததால் விரக்தி? மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை.!Cuddalore Man Killed wife and Suicide 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரின் மனைவி சுவேதா. தம்பதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகள் இல்லை. 

ஹிட்டாச்சி இயந்திரத்தின் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சக்திவேல், தான் வேளைக்கு செல்லும் இடங்களுக்கு மனைவியை உடன் அழைத்துச்சென்று தாங்கிக்கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார். அதன்படி, சின்னசேலத்திற்கு வேலைக்கு தம்பதிகள் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: சிக்கி தவிக்கிறேன்.. வீட்டு புரோக்கர் எடுத்த விபரீத முடிவு.! போலீசார் கண்ட ஷாக் வீடியோ!!

மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை

இந்நிலையில், ஜூன் 09ம் தேதியான நேற்று மாலை, தனது மனைவியை அவர் கொலை செய்து புதைத்து இருக்கிறார். பின் தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், தம்பதிகளுக்கு குழந்தை இல்லாதது தொடர்பாக பிரச்சனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையில்லாத விரக்தியில் மனைவியை கொலை செய்து பின் சக்திவேல் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கசந்த வாழ்க்கை; பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.!